லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியிடப்பட்டது. நான்கு நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த 'சலார்' படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து 146 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தற்போது 'புஷ்பா 2' டீசர் 107 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. அதற்குள் 'சலார்' டீசரின் சாதனையை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரையில் கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படத்தின் டீசர்தான் 274 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனை கடந்த மூன்று வருடங்களாக முறியடிக்கப்படாமல் உள்ளது.




