பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில் நாடக நடிகர்களின் ஓட்டை கணிசமாக பெற்றால்தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலை. அந்த நேரத்தில் அவருக்கு உதவிய நாடக நடிகர் வாசுதேவன் குமணன். ஆரணி அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களை விஷாலுக்கு ஆதரவாக திருப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
இதனால் குமணனுக்கும், விஷாலுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் அடிப்படையிலும், தேர்தலில் தனக்கு உதவியதன் அடிப்படையிலும் தான் நடித்துவரும் கத்திச்சண்டை படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் விஷால். இந்தப் படத்தில் குமணன் விஷாலின் நண்பராக நடித்துள்ளார். இதுவரை நாடகங்களில் மட்டுமே நடித்து வந்த குமணன் சினிமா வாய்ப்பை பெற்றிருக்கிறார். தனது ஒவ்வொரு படத்திலும் நாடக நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை விஷால் ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.