பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் நடிக்கும் படம் 'கஷ்மோரா'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறர். 'ரவுத்திரம்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
கார்த்தி நடிக்கும் படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். இது பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பேண்டசி கதை. பிரமாண்ட செட்டுகள் போட்டு படமாக்கப்பட்டது. கார்த்தி முதன் முறையாக மொட்டை போட்டு நடித்துள்ளார். இந்த படத்தில் 80 நிமிடத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதற்கான பணிகள் மும்பையிலும், ஹாலிவுட் ஸ்டூடியோக்களிலும் நடந்து வருகிறது. இதற்கான பட்ஜெட் மட்டும் பல கோடி ரூபாய் என்கிறார்கள். கிராபிக்ஸ் பணிகளுடன் பின்னணி இசை சேர்ப்பு பணிகள், டப்பிங் பணிகளும் நடந்து வருகிறது. தீபாவளிக்கு வெளிவருகிறது.