விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
விக்ரம்பிரபு, ஷாம்லி நடிக்கும் படம் 'வீரசிவாஜி'. 'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இதன் டீசரை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். டீசரை பார்த்த முருகதாஸ் “டீசர் பிரமாதமாக இருக்கிறது படம் கண்டிப்பாக வெற்றியடையும், வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இந்தப் படத்தில் இமான் இசை அமைத்த “அடடா என் தேவதையே இதுநாள் வரையில் என் விழிகள் தேடலையே...” என்ற பாடல் ஜார்ஜியாவில் உள்ள மலைபிரதேசமான கஸ்பகியில் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாகும்.