பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து கடந்த சில வருடங்களாகவே ஒரு சர்ச்சை எழுந்தது. அதன் பின் அனைவருமே ரஜினிகாந்தைத் தவிர வேறு யாருமே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை என்று அந்த சர்ச்சையை அப்படியே அழுத்தி மூடி விட்டனர். இருந்தாலும் சிலருக்கு தங்களை 'சூப்பர் ஸ்டார்' என்று அழைத்துக் கொள்ள ஆசைதான். தமிழைத் தவிர மற்ற மொழி ஊடகங்களில் தமிழில் உள்ள சில நடிகர்களை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பொதுவாக எழுதுகிறார்கள்.
ஆனாலும், ரஜினிக்கு அடுத்து வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஜய்தான் இருக்கிறார் என்பதை வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தெரிவிக்கிறார்கள். அதை சமீபத்தில் வெளிவந்த 'தெறி' படமும் நிரூபித்தது. ரஜினி, விஜய்க்கு அடுத்து அந்த அளவிற்கு இல்லையென்றாலும் அதில் பாதி இடத்தையாவது யார் பிடிப்பார்கள் என்று தற்போது ஓரளவிற்குத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வெற்றிகள் இல்லையென்றாலும், திறமை விதத்திலும், குழந்தை ரசிகர்களைக் கவரும் விதத்திலும் தனுஷ் அவர்களது இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார். அதற்கு உதாரணமாக சமூக வலைத்தளங்களைச் சொல்லலாம்.
டிவிட்டரைப் பொறுத்தவரையில் ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 10 ஆயிரமாக உள்ளது. இவருக்கடுத்து தனுஷ் 29 லட்சத்து 90 ஆயிரம் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 11 ஆயிரம் பேரைப் பெற்றால் ரஜினியையே தனுஷ் கடந்து விடுவார்.
ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரையில் விஜய்க்கு 53 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர். அதற்கடுத்து 40 லட்சம் தொடர்பாளர்களுடன் தனுஷ் இரண்டாமிடத்தில் உள்ளார்.
ரஜினிகாந்த் டிவிட்டரில் மட்டுமே இருக்கிறார் ஃபேஸ்புக்கில் இல்லை. விஜய் ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டிலும் இருக்கிறார். இருந்தாலும் இரண்டையும் சேர்த்து விஜய்யைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 59 லட்சம் தொடர்பாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், தனுஷுக்கு இரண்டையும் சேர்த்து 69 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர்.
ஆக, சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்குத் தள்ளி தனுஷ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.