பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நாகார்ஜூனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடிக்க வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மார்ச் 25ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் 'தோழா'. பிரெஞ்சுப் படமான 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற படத்தை ரீமேக் செய்து இரு மொழிகளிலும் வெளியிட்டார்கள். இரு மொழிகளிலுமே இந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நாகார்ஜூனாவும், தெலுங்கில் முதல் முறையாக கார்த்தியும் நடித்தனர்.
படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்த நாகார்ஜூனா படம் முழுவதுமே சக்கர நாற்காலியில் இருக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் படத்தின் கதை சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது. கார்த்திக்கு தெலுங்கில் ஒரு நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தப் படம் தெலுங்கில் 42 கோடி ரூபாயையும், தமிழில் 27 கோடி ரூபாயையும் மற்ற மாநிலங்களில் 15 கோடி ரூபாயையும், மற்ற நாடுகளில் 14 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. அதோடு படத்தின் இரு மொழி சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையையும் சேர்த்தால் இந்தப் படம் சுமார் 110 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு மொழிகளிலுமே இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.