தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
இரட்டை வேடத்தில் நடிப்பதுடன், பாடகி அவதாரமும் எடுத்துள்ள நடிகை த்ரிஷா நடிக்கும், நாயகி பட போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது. கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் நடிகை த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், நாயகி. தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தமிழ் உரிமையை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.நாயகி படத்தில், த்ரிஷா, இரட்டை வேடத்தில் நடித்திருப்பதுடன், ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
வில்லி தோற்றத்தில், த்ரிஷா தோன்றிய, நாயகி பட போஸ்டர் ஆரம்பத்திலேயே பிரபலமானது. தற்போது, அனுஷ்காவின் அருந்ததி பட பாணியில் வெளியாகியுள்ள, த்ரிஷாவின் புது போஸ்டர் காண்போரை மிரள வைத்துள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.