பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்' நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ள படம் - 'மாப்ள சிங்கம்'. இயக்குநர் எழிலுடைய உதவியாளரான ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விமல், அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர். 'தூங்கா நகரம்', 'கலகலப்பு' ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விமலும், அஞ்சலியும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் காமெடிக்கு சூரி மட்டுமல்ல வளர்ந்து வரும் காமெடி நடிகரான காளி வெங்கட்டும் இணைந்துள்ளார்!
மாப்ள சிங்கம் படத்தில் விமல் அஞ்சலி ஜோடி மட்டுமல்ல இன்னொரு இளம் ஜோடியும் உள்ளது. அது... விஷ்ணு - மதுமிலா. சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆஃபீஸ்' சீரியலில் கலக்கியவர்கள் விஷ்ணுவும், மதுமிலாவும். 'ஆஃபீஸ்' சீரியலில் ஸ்ருதி ராஜ் கதாநாயகியாக இருந்தாலும், அவரது தோழியாக நடித்த மதுமிலாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.
அதேபோல், 'ஆஃபீஸ்' சீரியலில் கார்த்திக் கதாநாயகன் என்றாலும் அவரது நண்பராக நடித்த விஷ்ணுவுக்கும் ரசிகர்கள் அதிகம் இருந்தனர். இதை கருத்தில் கொண்டுதான் மாப்ள சிங்கம் படத்தில் விஷ்ணு - மதுமிலாவை நடிக்க வைத்தனர். 'ஆஃபீஸ்' சீரியலை மக்கள் மறந்தநிலையில் மாப்ள சிங்கம் தாமதமாக தற்போது வெளியாகிறது.