விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
சீனாவின் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஜாம்பவனான சோயுன்ஃபாட் மற்றும் லேடி சூப்பர்ஸ்டாரான மிச்செலியோ நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு 'க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்' படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது.
தமிழிலும் பாயும் புலி பதுங்கும் நாகம் என்று மொழிமாற்றம் செய்து இங்கும் பெறுவெற்றி அடைந்தது.
15 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் தொடர்ச்சியினை யுவென்வூபிங் எடுத்துள்ளார். 'க்ரோச்சிங் டைகர், ஹிட்டன் ட்ராகன்: ஸ்வார்ட் ஆப் டெஸ்டினி' என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
மீண்டும் அதே லேடி சூப்பர்ஸ்டார் மிச்செலியோ கத்தியை சுழற்றி சுழற்றி பறந்து பறந்து அடிக்கிறார். ஆனால், இந்த முறை அவரை எதிர்த்து சண்டையிடுவது 'ஐபி மேன்' படத்தின் ஹீரோவான மார்ஷியல் ஜாம்பவான் டோனி யென்.
மிக பிரம்மாண்டமான பொருட்செலவில், சீன படங்களுக்கே உரித்தான மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சிகளுடன் படமாக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக காத்திருக்கிறது விதியின் வாள்.