‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையசரன், சாண்டி, ஆதித்யா, சோபியா, ஜனனி, கவுரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'. இப்படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் உள்ள ஒரு தலைப்புதான்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதில் பல கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வசனங்கள், காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. யு டியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு, டிரைலர்களுக்கு சென்சார் தேவையில்லை. அதனால், சினிமா டிரைலர்கள் சிலவற்றை பரபரப்பு ஏற்படுத்துவதற்காகவே கெட்ட வார்த்தைகள், ஆபாசக் காட்சிகள் ஆகியவற்றுடன் உருவாக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற முயற்சிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சென்சார் ஆகாத, அந்த டிரைலரை திரையிட்டுள்ளார்கள். இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்புதானே எனக் காரணம் சொன்னார். இதனால் சலசலப்பு எழுந்து சர்ச்சையில் முடிந்தது.
சமீபத்தில் கூட 'பைரி' என்ற படத்தை சென்சார் செய்வதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்காகத் திரையிட்டார்கள். அதில் பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. அது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது இந்த பத்திரிகையாளர் காட்சிகளுக்கு சென்சார் தேவையில்லை என்ற அர்த்தத்தில் பேசினார்கள்.
இப்படி சென்சார் ஆகாத படங்கள், டிரைலர்கள் ஆகியவற்றை பத்திரிகையாளர்களக்குத் திரையிட்டால் அதைப் பார்த்துத்தானே அவர்கள் தங்களது விமர்சனங்களையும், செய்திகளையும் வெளியிடுவார்கள்.
இப்படி சென்சார் செய்யப்படாத திரைப்படங்கள், டிரைலர்கள் ஆகியவற்றை பத்திரிகையாளர்களக்கு திரையிடுவது சரியா என்பது குறித்து சென்சார் குழுவினர் உரிய விளக்கம் அளிப்பார்களா ? என்றும் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.