சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருந்த 'ஹாட் ஸ்பாட்' மார்ச் 29ம் தேதி வெளியானது. இந்த படத்தின் டீசரும், விளம்பரமும் இதை அடல்ட் கண்டன்ட் படமாக காட்டியதால் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இந்த படம் 4 கதைகளை கொண்ட வித்தியாசமான படம் என்ற விபரங்கள் வெளியாகின.
இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவை படக் குழுவினர் நடத்தினார்கள். இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வார இறுதியில் தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருந்தால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. தயாரிப்பாளரிடம் சொன்ன 8 கதைகளில் நான்கு கதையை இந்த படத்தில் கொடுத்தோம். அடுத்த நான்கு கதைகளோடு அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 உருவாகும் என்றார்.
இயக்குனருக்கு 10 லட்சம் ரூபாய் மேடையிலேயே முன்பணமாக கொடுத்தார் தயாரிப்பாளர். முதல்பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் அப்படியே இரண்டாம் பாகத்தில் தொடருகின்றனர் என்றும் நடிகர், நடிகைகள் மாறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.