2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2 தேசிய விருதுகளையும் பெற்ற ஷோபனா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது பலர் அறியாத ஒன்று. 1980ம் ஆண்டு வெளிவந்த 'மங்கள நாயகி' என்ற படத்தில் ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 10. அறிமுகப்படுத்தியவர்கள் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'சாஜன் பினா சுஹாகன்' என்ற படத்தின் ரீமேக் இது. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சரத்பாபு, சிவச்சந்திரன், மனோரமா, நிஷா, ஸ்ரீகீதா உட்பட பலர் நடித்தனர். வி.குமார் இசையமைத்திருந்தார்.
அதன்பிறகு 'மன்மத ராகங்கள்' படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு, தமிழில் தயாரான 'பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற சிறுவர்கள் படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 12. அதன்பிறகு 1984ம் ஆண்டு தனது 14வது வயதில் ஹீரோயின் ஆனார். தமிழில் 'எனக்குள் ஒருவன்', தெலுங்கில் 'மர்ச்சண்டி மனா சட்டலு', மலையாளத்தில் 'ஏப்ரல் 18' ஆகிய படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.