ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ‛இளையராஜா' என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இளையராஜாவின் நீண்டகால நண்பர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இளையராஜாவிடத்தில் கீபோர்ட் பிளேயராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் இசையமைத்த பல படங்களுக்கு பாடல் எழுதிய அவரது தம்பி கங்கை அமரன் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், ரஜினி - கமல் ஆகியோர் இப்படத்தில் நடிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டால், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைவது உறுதியாகி விடும். கடைசியாக 1981ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லு முல்லு என்ற படத்தில் ரஜினியும், கமலும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.