2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. அடிப்படையில் கிராபிக்ஸ் டிசைனரான இவர், ‛படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவகாசி, மஜா, சண்டக்கோழி' உள்ளிட்ட பல படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார். கோச்டையான், வேலையில்லா பட்டதாரி படங்களை இயக்கினார். கோவா படத்தை தயாரித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சவுந்தர்யா தற்போது மீண்டும் வந்திருக்கிறார். இந்த முறை அவர் கால் பதித்திருப்பது வெப் தொடரில். 'கேங்ஸ்: குருதி புனல்' என்ற தொடரில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இந்த தொடரில் அசோக் செல்வன், சத்யராஜ், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
70களின் பின்னணியில் நடக்கும் இக்கதை இரு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டுள்ளது. நோவா இயக்கியுள்ளார்.