பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இயக்குனர் ஏ.எல்.விஜய், பிரபுதேவாவை இதுவரை இயக்கியதில்லை. முதன் முறையாக ஒரு புரமோசன் ஆல்பத்துக்காக இயக்கி இருக்கிறார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி போன்று சேம்பியன் டென்னிஸ் லீக் போட்டிகளை பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ் நடத்தி வருகிறார். இதில் விளையாடும் சென்னை வாரியர்ஸ் அணியை நடிகர் பிரபுதேவாவும், வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் ஜசரி கணேசும் இணைந்து வாங்கி உள்ளனர். இந்த அணியின் பிராண்ட் அம்பாசிடராகவும் பிரபு தேவா உள்ளார்.
சென்னையில் டென்னிஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தவும், சென்னை வாரியர் அணியின் புரமோசனுக்காகவும் புரமோசன் ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். இந்த ஆல்பத்திற்காக மதன் கார்க்கி "டென்னிஸ்னா சென்னைதான்..." என்ற பாடலை எழுதியுள்ளார். அதற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் ஆடியுள்ளார். இயக்குனர். ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இந்த ஆல்பம் நேற்று முதல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.