பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

நடிகர் பிரபுதேவா தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று ஒதுங்கி தனியாகவே வாழ்ந்து வந்தார். இடையில் நடிகை நயன்தாராவுடன் காதல் என சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பிறகு அந்த விஷயம் அடங்கிய நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியம் அளித்தார் பிரபுதேவா.
இந்த நிலையில் முதன்முறையாக தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. இவர்கள் இருவரும் கோயிலுக்கு வந்து சென்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. பிரபுதேவாவின் தற்போதைய மனைவியான ஹிமானி சிங் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு வலி சிகிச்சைக்காக இவரிடம் சிகிச்சை பெற்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.