நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபத்தில் சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் என்கிற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திற்கு பொருந்தும் அளவிற்கு சமந்தா இல்லை என்றும், அவரது மார்க்கெட் முடிந்து விட்டது என்றும், இனி அவர் துணை நடிகை வேடங்களில் நடிப்பது தான் நல்லது என்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் சிட்டிபாபு கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மேலும் சமந்தாவின் மார்க்கெட் இறங்கியதால் தான் அவர் ஒரு பாடலுக்கு ஆடி சம்பாதிக்கும் நிலைமைக்கு வந்துள்ளார் என்றும் கூறினார். இதுகுறித்து நேரடியாக சமந்தா அவருக்கு பதில் அளிக்காவிட்டாலும் சில நாட்கள் கழித்து, ஆண்களின் காதுகளில் முடி வளர்ப்பது எப்படி என தான் கூகுளில் தேடிய ஒரு ஸ்கிரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் சமந்தா.
இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் சமந்தாவை விமர்சித்த தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் காதுகளில் தான் இப்படி முடி வளர்ந்துள்ளது. சமந்தா நேரடியாக பதில் தராமல் இப்படி அவரை கிண்டலடிக்கும் விதமாக பதில் தந்ததில் பலருக்கும் உடன்பாடு இல்லை. இதற்கு சமந்தா அந்த தயாரிப்பளருக்கு நேரடியாகவே பதில் அளித்து இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சமந்தா என் காதுகளில் வளரும் முடியை மட்டும் பார்த்து உள்ளார். அதனால் அதைப்பற்றி கூறியுள்ளார். என் உடலில் இன்னும் வேறு இடங்களிலும் முடி வளர்ந்திருக்கிறது. வேண்டுமென்றால் அதையும் அவர் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம்” என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
அது மட்டுமல்ல சமந்தா இன்னும் 18 - 20 வயது டீனேஜ் பெண் அல்ல.. அவர் சகுந்தலை கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தவில்லை என்பதை கூறி, அவருக்கு வயதாகி விட்டதால் துணை நடிகை கதாபாத்திரங்களில் அவர் நடிக்கலாம் என்று தான் நான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது.. அதற்கு எனக்கு நேரடியாகவே அவர் பதிலளித்து இருக்கலாமே” என்று பேசியுள்ளார் தயாரிப்பாளர் சிட்டிபாபு.
அவரது இந்த பதில் சற்றே அநாகரிகம் என்றாலும் இதை துவங்கி வைத்தது சமந்தா தான் என்பதால் அவருக்கும் இந்த சர்ச்சையில் பாதி பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.