பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி தனது அடுத்த படத்திற்கு தயராகிவிட்டார்.
உதயன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக டைரக்டர் சாப்ளின் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தரணி, கரு.பழனியப்பன், பாண்டிராஜ், ஆயோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். முத்தமிழ் படைப்பகம் சார்பில் பிரபாகரன் இப்படத்தை தயாரிக்கிறார். மணிகாந்த் கத்ரி இசையமைக்க, எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
முதல்படத்தில் கிராமத்து இளைஞனாக வந்து கலக்கிய அருள்நிதி, இந்த படத்தில் நகரத்து இளைஞனாக நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும் என்று டைரக்டர் கூறுகிறார். அருள்நிதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ப்ரனிக்தா நடிப்பார் எனத் தெரிகிறது.