என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி சினிமாவில் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என்று 'மாமன்னன்' படம் வெளியான போதே அறிவித்துவிட்டார். ஆனாலும், அவ்வப்போது சில பல படங்களைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் போடுவதையும் செய்து வருகிறார்.
அந்த விதத்தில் நேற்று வெளியான கன்னடப் படமான 'சப்டா சாகரதாச்சே எல்லோ - சைட் பி' என்ற படத்தைப் பாராட்டியுள்ளார். இப்படம் தமிழில் 'ஏழு கடல் தாண்டி' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
'சார்லி' படத்தில் நடித்த ரக்ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த், சைத்ரா அச்சர் மற்றும் பலர் நடித்துளள இப்படத்தை மேஹந்த் எம் ராவ் இயக்கியுள்ளார். படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி இப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
“சிறந்த திரைப்பட உருவாக்கம். வாழ்த்துகள் ரக்ஷித் ஷெட்டி பிரதர் அண்ட் டீம். நீங்கள் சினிமாவின் மாயஜாலக்காரர்கள்… பெரிய திரைக்குச் சென்று படத்தைப் பாருங்கள்,” என உதயநிதி பாராட்டியுள்ளார்.