கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. ‛வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் ‛காளி' படத்தை இயக்கினார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயம் ரவியை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இறைவன், சைரன் படங்களை முடித்துவிட்டு சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.