அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

கடந்த 2022ல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் நடித்து, இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்விராஜ் மற்றும் அவரது நண்பரான தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லிஸ்டின் ஸ்டீபனுக்கும் படத்தின் முதல் இரண்டு வார கலெக்ஷனில் ஏற்பட்டுள்ள பங்கு பிரிக்கும் பிரச்னை காரணமாக இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. வினியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் இரண்டு வாரங்களுக்கு வசூலில் 55 சதவீதம் பங்கு தர வேண்டும் என கேட்கிறார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ முதல் வாரம் மட்டுமே 55 சதவீத பங்கு தர ஒப்புக் கொண்டுள்ளனர். லிஸ்டின் ஸ்டீபன் இந்த விஷயத்தில் இறங்கி வர பிடிவாதம் காட்டுவதால், இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது இருந்தாலும் படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்குள் இருதரப்பிலும் பேசி பிரச்னையை சரி செய்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது.