2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இயக்குனர் சணல்குமார் சசிதரன். அப்படி இவர் நடிகை மஞ்சு வாரியரை கதாநாயகியாக வைத்து காயாட்டம் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் படம் முடிந்த நிலையில் மஞ்சு வாரியருக்கும், சணல் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனாலேயே இன்னும் கூட படம் வெளியாகவில்லை.. இதனால் மஞ்சு வாரியருக்கு சிலரால் ஆபத்து என்பது போல சோசியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
தன் மீது வீணாக அவதூறு பரப்புகிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து அப்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் சணல்குமார் சசிதரன். ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து கேரளா திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது கேரளாவில் இருந்து அங்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது..