‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
நடிகை பார்வதி மலையாள திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொட போகிறார். இத்தனை வருடங்களில் அவர் நடித்தது குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் தான். காரணம் செலெக்ட்டிவ்வான நல்ல கதையும் கதாபாத்திரமும் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. இதுநாள் வரை உணர்வுபூர்வமான கதைகளில், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்தநிலையில் முதன் முறையாக 'பிரதம திருஷ்திய குற்றக்கார்' என்கிற போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையில் நடிக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் பார்வதி. சாஹத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து துவங்க இருக்கிறது என்கிற தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.