சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இப்படத்திற்காக சிலம்ப பயிற்சி எடுத்து சண்டை காட்சியில் நடத்திருக்கும் மாளவிகா மோகனன் மேடைக்கு வந்தபோது, இந்த மேடையில் நீங்கள் யாருடன் சிலம்ப சண்டை போட விரும்புகிறீர்கள்? என்று தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, தங்கலான் என்று பதில் கொடுத்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார். அதையடுத்து இப்படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான பார்வதியை மேடைக்கு அழைத்து மாளவிகாவுடன் கம்பு சுற்ற வைத்தார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் சிலம்பக் கம்புகளை கையில் பிடித்தபடி சுழற்றிக் கொண்டு நின்றார்கள்.