2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

மலையாள நடிகை பார்வதி அருண். 'காரி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது அவர் 'மெம்மரீஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வெற்றி ஹீரோ, பிரவீன் இயக்கி உள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பது குறித்து பார்வதி அருண் கூறியதாவது: இது தான் எனது முதல் தமிழ்ப்படம். ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. கொரோனா காலத்திற்கு முன்பே படம் தொடங்கியது. வெற்றி பிசியான நடிகராகி விட்டார். அவருக்காக தயாரிப்பாளரும், இயக்குனரும் காத்திருந்தனர், நானும் காத்திருந்தேன். இப்போதுதான் அதற்கான வாய்ப்புகள் அமைந்து படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. சஸ்பென்ஸ் கதை என்பதால் எனது கேரக்டர் பற்றி அதிகம் பேச முடியாது. கேரக்டர் பெயர் ஜானகி, இரண்டு விதமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும் என்றார்.
படம் குறித்து வெற்றி கூறியதாவது : எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குனருக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது. என்றார்.




