டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஹிந்தியில் வெளியான ‛பேபி ஜான்' படத்திற்கு பின் அவரது நடிப்பில் ஆக., 27ல் வெளியாக உள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இதையடுத்து ‛அக்கா' என்ற வெப்சீரிஸிலும் நடிக்கிறார். இவைதவிர ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் ‛உப்பு கப்புரம்பு' என்ற படத்தில் நடித்துள்ளார். சத்தமின்றி நடந்து முடிந்துள்ள இந்த படத்தை சசி இயக்கி உள்ளார். நடிகர் சுகாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 90களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ள இப்படம் தியேட்டர் வெளியீட்டிற்கு தான் தயாரானது. இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சில காரணங்களால் இந்த படத்தை நேரடியாக ஜூலை 4ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.




