ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
கடந்த சில நாட்களாகவே மலையாளத் திரை உலகில் பிரபல தயாரிப்பாளரான மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் குறித்த செய்தி தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஒரு ஹீரோவின் பெயரை குறிப்பிடாமல் அவரைப் பற்றிய சில விஷயங்களை கூறியது மலையாள திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருப்பதாக தொடர்ந்து கூறி வருபவரும், அதே சமயம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ், இவர் கூறியது நடிகர் நிவின்பாலியை தான் என்று திரியை கொளுத்தி போட்டார்.
இதனைத் தொடர்ந்து லிஸ்டின் ஸ்டீபனுக்கு நிவின்பாலி ரசிகர்கள் இடம் இருந்து எதிர்ப்பு வலுத்தது. அதே சமயம் நான் நிவின்பாலி பற்றி சொல்லவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். அதேபோல கோவில் தரிசனத்திற்காக வந்திருந்த நிவின்பாலியிடம் இது பற்றி கேட்டபோது, யார் எது சொன்னாலும் இப்போது அது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்த கோவிலில் இருந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருப்போம் என்று மட்டும் வேண்டிக் கொள்வோம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு பதில் சொல்லி சென்றார்.
இந்த சர்ச்சை இவ்வளவு பெரிதாவதற்கு காரணம் தற்போது லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்து வரும் பேபி கேர்ள் என்கிற படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு பாதி நடைபெற்று முடிந்த நிலையில் சில காரணங்களால் இடையில் நின்றிருந்தது. அதனால் நிவின்பாலி குறித்து தான் மறைமுகமாக தயாரிப்பாளர் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிவின்பாலி தற்போது வைக்கமில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளர், நிவின்பாலி இருவருக்கும் சமரச உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது தெரியவந்துள்ளது இந்த படத்தை அருண் வரமா என்பவர் இயக்கி வருகிறார்.