விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். சமீப நாட்களாகவே மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான மரியூபன்ச் சவு என்கிற நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரபல நடந்த கலைஞரான விக்கி பார்தியா தான் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த நடனத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருடன் பணியாற்றிய அனுபவங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்கி பார்த்தியா. இது குறித்து அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவுடன் பணி புரிந்தது உண்மையிலேயே சிறப்பான அனுபவம். அவர் ரொம்பவே துறுதுறுப்பான, வேடிக்கையான, பலமான, தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அன்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபர். நடன ஒத்திகையின் போதும் படப்பிடிப்பில் நடன காட்சிகளை படமாக்கும் போதும் அவருடைய எனர்ஜியை பார்க்கும் போது நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது. தன்னுடைய அனைத்து விதமான கடின உழைப்பையும் அவர் கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளார்.




