இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? |
ஒரு படத்தின் மூலம் ஓஹோவென உயர்ந்த ஹீரோயின்களில் ஒருவர் கயாடு லோஹர். அந்த படம் டிராகன். அந்த பட வெற்றிக்குபின் தமிழகத்தில், தென்னிந்தியாவில் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகிறது. அவர் சின்ன ரீல்ஸ் போட்டாலும் அது பல மில்லியன் வியூஸ் சென்றது. சிம்பு படம் உட்பட சில படங்களில் கயாடும் கமிட்டானார். பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பார்ட்டியில் அவருக்கு 35 லட்சம் பேக் பரிசாக அளிக்கப்பட்டது தகவல் பரவியது. அது அரசியல் பார்ட்டி என்ற கான்டர்வசி பரவ, பலரும் கயாடுவை திட்டி தீர்த்தனர். அவர் போட்டோ, வீடியோ வந்தாலே 35 லட்சம் பேக் என்று கமென்ட் அடித்தனர். இதுவரை அந்த பார்ட்டி, அந்த பரிசு குறித்து கயாடு விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று டிராகன் படத்தின் 100வது விழா சென்னையில் நடக்கிறது. அதில் அது குறித்து கயாடு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு சிலர் அந்த விழாவில் கயாடு கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். இன்று இரவு இதற்கான பதில் கிடைக்கலாம்.