Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர்

28 ஜூன், 2025 - 04:03 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathis-son-Vijays-Janyayan-director-at-the-film-festival
Advertisement

விஜய்சேதுபதி மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ். இந்த படத்தின் பாடல், டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய்சேதுபதி, அவர் நடிக்கும் தலைவன் தலைவி படத்தை இயக்கும் பசங்க பாண்டிராஜ், பைட் மாஸ்டர் பெப்சி விஜயன், தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கும் எச்.வினோத்தும் விழாவில் கலந்து கொண்டு, பேசினார். விஜய்சேதுபதி மகன் படத்தை விஜய் பட இயக்குனர் வாழ்த்த வருகிறார்? எப்படி கனெக் ஷன் என பலர் நினைத்தனர்.

இது குறித்து விசாரித்தால் பீனிக்ஸ் படத்தை இயக்குபவர் பைட் மாஸ்டார் அனல் அரசு. இவர் இந்தியளவில் முன்னணி பைட் மாஸ்டர். அவர் மனைவி ராஜலட்சுமி இந்த படத்தை தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்கிய பல படங்களுக்கு அவர் பைட் மாஸ்டர். அந்த வகையில் விழாவுக்கு வந்தார் என்றார்கள்.

பொதுவாக விஜய் சேதுபதி நடிக்கும் பட விழாக்களுக்கு வராத, அவர் மனைவி ஜெசியும் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் விழா என்பதால் பீனிக்ஸ் விழாவுக்கு வந்தார். பட விழாவில் நடிகை தேவதர்ஷினி, சூர்யா சேதுபதியை என் மகன் மாதிரி என்று பாராட்டினார். காரணம், படத்தில் அவர்தான் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

பொதுவாக தங்கள் வாரிசுகள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படங்களில், சம்பந்தப்பட்ட ஹீரோ கவுரவ வேடத்தில் நடிப்பது உண்டு. இதுவரை பல படங்களில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் கவுரவ வேடத்தில் வருகிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ?ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ... விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல விஷ்ணு விஷால் குடும்ப கதையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in