நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2024ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஆறு வாரங்களே உள்ளது. இந்த ஆண்டின் கடைசி பெரிய படமாக நாளை 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து டிசம்பர் 20ம் தேதி 'விடுதலை 2' படம் வெளியாக இருக்கிறது. இவற்றோடு டிசம்பர் 5ல் 'புஷ்பா 2' டப்பிங் படமும் வரும். இடைப்பட்ட வாரங்களில் மற்ற தமிழ்ப் படங்களை வெளியிடுவதற்கான சரியான தேதியைத் தேர்வு செய்வது தயாரிப்பாளர்களுக்கு தலைவலியான ஒன்று.
நாளை நவம்பர் 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதே போல அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்தப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார்கள்.
'பீனிக்ஸ்' பட வெளியீடு தள்ளி வைப்புக்கு, 'எதிர்பாராதா சூழ்நிலைகள் காரணமாக,' என்றும், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்திற்கு 'ஒரு வார கனமழை அறிவிப்பு' காரணம் என்றும் அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏற்கெனவே, 'அமரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், 'கங்குவா' படத்திற்குக் கூட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. இந்நிலையில் 'பீனிக்ஸ், எமக்குத் தொழில் ரொமான்ஸ்' ஆகிய படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும் தகவல். அதனால்தான், படங்களைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
இனி, எஞ்சியுள்ள ஆறு வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஆறேழு படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.