அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை | அதிக சம்பளமா? அதிர்ச்சியான மமிதா பைஜூ | நடிகை ஆன பெண் இயக்குனர் | தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை | 'ஜெயிலர் 2' படத்தில் வித்யாபாலன்? | சிரஞ்சீவியின் தெலுங்குப் படத்தில் நடிக்கும் கார்த்தி? |

தெலுங்கில் நடிகர் ரவிதேஜாவின் 'மிஸ்டர் பச்சன்' திரைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவர் நடித்துள்ள 'மாஸ் ஜாதரா' திரைப்படம் வரும் அக்.,31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பானு போகவரப்பு இயக்கியுள்ளார். 'தமாகா' படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தில் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவிதேஜா.
இந்த நிலையில் தற்போது இந்த படம் அக்.,31க்கு பதிலாக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காரணம் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு 'பாகுபலி ; தி எபிக்' என்கிற பெயரில் ஒரே படமாக அதே அக்.,31ம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த நாளில் ரசிகர்களின் கவனம் முழுவதும் பாகுபலி பக்கம் தான் இருக்கும் என்பதால் அதனுடன் ஏற்படும் போட்டியை தவிர்ப்பதற்காக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி மாஸ் ஜாதரா படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.