புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளியான 'பாகுபலி 1', 2017ல் வெளியான 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து ஒரே படமாக 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் இந்த மாதம் 31ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள்.
ஐமேக்ஸ், டால்பி விஷன், 4டிஎக்ஸ், டி பாக்ஸ், எபிக் ஆகிய திரையிடல் தொழில்நுட்பங்கள் உள்ள தியேட்டர்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. 'பாகுபலி' படங்கள் வெளியான போது இந்த நுட்பங்கள் கொண்ட தியேட்டர்கள் அதிகமாக இல்லை. ஆனால், இப்போது குறிப்பிடும்படியாக உள்ளன. எனவே அகன்ற திரைகளில் பார்க்கும் போது புது அனுபவம் கிடைக்கும்.
'பாகுபலி தி எபிக்' படம் 3 மணி நேரம் 40 நிமிடம் வரை இருக்கும் என அதன் தயாரிப்பாளர் ஷோபு எர்லகட்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முதல் பாகம் 'தி எபிக்' படத்தின் இடைவேளை வரையிலும், இரண்டாம் பாகம், இடைவேளைக்குப் பிறகான படமாகவும் இருக்குமாம். சில பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றை நீக்கி 'தி எபிக்' படத்தை மாற்றி அமைத்துள்ளார்கள். 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்' என்பது 'தி எபிக்' படத்தின் இடைவேளை காட்சியாக அமைக்கப்பட்டுள்ளதாம்.
இரண்டு பாகங்களை இணைத்து ஒரே பாகமாக மறு வெளியீடு செய்வது இந்தியத் திரையுலகத்தில் இதுதான் முதல் முறை. ரசிகர்கள் மீண்டும் படத்தைப் பார்த்து எந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு ஓரிரு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.




