தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சாந்த ரூபன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், ராஷ்மிகா மந்தனா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்க 'ரெயின்போ' என்ற படத்தை 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். அதன்பின் அந்தப் படம் பற்றிய எந்தவிதமான அப்டேட்களும் அதிகமாக வெளியாகவில்லை.
தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப் நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடிக்க ஒரு படத்தை ஆரம்பித்து அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
ராஷ்மிகா நடிக்க 'மைசா' என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியானது. அவர் தமிழிலும் நடிக்க ஆரம்பித்த 'ரெயின்போ' படத்தின் ஞாபகம் அதனால் மீண்டும் வந்துள்ளது. ஒரு முன்னணி நடிகையின் படத்தைப் பற்றிய அப்டேட்டை தமிழில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவிக்கலாமே.