இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். அவரது நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அவரது தம்பி ருத்ரா நாயகனாக நடிக்கும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(ஜூன் 28) சென்னையில் நடைபெற்றது.
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையமைப்பில், ருத்ரா, மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அவர்கள் அறிவித்த 10 படங்களில் 3 படங்களை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.
'பேச்சுலர்' படத்தை இயக்கிய சதீஷ் இயக்கும் ஒரு படம், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படம், செல்ல அய்யாவு இயக்கத்தில் ஒரு படம், என 3 படங்களை அடுத்தடுத்து விஷ்ணு விஷால் தயாரிக்க உள்ளார். செல்ல அய்யாவு இதற்கு முன்பு விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி' படத்தை இயக்கி உள்ளார். அருண்ராஜா காமராஜ் 'கனா, நெஞ்சுக்கு நீதி' ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.