அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கான அறிவிப்பை ஒரு வீடியோ முன்னோட்டத்துடன் வெளியிட சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். அந்தப் படம் 'வட சென்னை' படத்திற்கான முன்பகுதி கதையாக, 'ராஜன் வகையறா' என்ற தலைப்பில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'வட சென்னை' படம் 2018ல் வெளிவந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அதற்கடுத்து சீக்கிரத்திலேயே உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆரம்பமாகவேயில்லை.
இதனிடையே, வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணி பற்றிய தகவல் வெளிவந்து முன்னோட்ட வீடியோவுக்கான படப்பிடிப்புப் பற்றியும் செய்திகள் வெளியாகி திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் குறித்து தனுஷிடமும் வெற்றிமாறன் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார் என்றும் சொன்னார்கள்.
இருப்பினும் கடந்த சில தினங்களாக இந்தப் படம் குறித்த சில விஷயங்கள் கோலிவுட் வட்டாரங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 'ராஜன் வகையறா' என்ற தலைப்பிற்கும், அது சம்பந்தமான வட சென்னை கதைக்கும் தனுஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம். 2018ல் வெளிவந்த 'வட சென்னை' கதை, கதாபாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாகவும், அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் 'என்ஓசி' வாங்க வேண்டும் என்றும் கூறினார்களாம். மீறி படமெடுத்தால் 20 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுப்போம் என்று சொன்னதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணன் செல்வராகனை விடவும் தனுஷுக்கும், அவரது நடிப்புக்கும் சரியான தீனி போட்ட, “பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன்' ஆகிய படங்களையும், அவருக்கு தேசிய விருதுகளை இரண்டு முறை பெற்றுத் தரவும் காரணமாக இருந்த வெற்றிமாறன், சிம்புடனான தனது படத்திற்கு தனுஷ் தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளாராம். இருந்தாலும் வட சென்னை, அது சம்பந்தமான கதைக்களம் ஆகியவை பொதுவானவை, அந்தப் படத்தை எடுப்பதிலிருந்து எந்த விதத்திலும் பின் வாங்க மாட்டேன் எனக் கூறிவிட்டாராம். அதனால், 'ராஜன் வகையறா', எனப் பெயர் வைப்பதற்குப் பதிலாக 'ராஜா வகையறா' என்று கூட மாற்றி எடுப்பேன் என்று சொன்னாராம்.
நயன்தாராவின் திருமண வீடியோ அடங்கிய அவரது டாகுமென்டரி படத்தில் தனுஷ் தயாரிப்பில் வந்த 'நானும் ரவுடிதான்' படப் பாடல்கள், சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். அதற்கடுத்து இப்போது 'ராஜன் வகையறா' குறித்து ஏதும் வழக்கு தொடர்வார்களா என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.
எந்தவிதமான பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து வெற்றிமாறன் படத்தில் நடித்து முடிப்பதற்கு சிம்பு தயாராகவே இருக்கிறார் எனவும் சொல்கிறார்கள். 'தக் லைப்' படத்தின் எதிர்பாராத தோல்வியால் வெற்றிமாறனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட்டாராம் சிம்பு. தமிழில் 'குபேரா' எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பதால் தனக்கு தனி அடையாளத்தைத் தந்த 'வட சென்னை' சம்பந்தப்பட்டு கிடைத்த நற்பெயரை வேறொரு நடிகருடன் எதிர்காலத்தில் பங்கு போட்டுக் கொள்ளவும் தனுஷ் விரும்பவில்லையாம்.
'வட சென்னை'யை 'வாடா சென்னை' என வம்புக்கிழுக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.