சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

'பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ள நிலையில் அவர்களுடன் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த இட்லி கடை படத்தின் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை இப்படம் இரண்டு கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. மேலும் தனுஷின் 52வது படமான இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் இந்த இட்லி கடை படத்தின் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.