ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் |
விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பீனிக்ஸ்'. சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை 4ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது: என்னுடைய மகனைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசுவிற்கு மிகப் பெரிய நன்றி. 2019ல் எனக்கு அனல் அரசு கதையை சொன்னார், ஆனால் அப்போது அதனை பண்ண முடியவில்லை. பிறகு சூர்யா இந்த கதையில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டார், எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.
என் பையனின் முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சூர்யாவை கதை கேட்கச் சொன்னேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை. என்னுடைய சினிமா அனுபவங்களை எப்போதும் என் குடும்பத்தில் பகிர்ந்து கொள்வேன். அவருடைய விஷயங்களை அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் படத்தின் பூஜை மற்றும் மற்ற விஷயங்கள் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை. சூர்யாவிடம் அவ்வப்போது மகிழ்ச்சியாக உள்ளதா? என்று கேட்பேன். அவரும் உள்ளது என்பார்.. அவ்வளவுதான்.
அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் நன்றி. அனல் அரசு மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன். இங்கே வந்து சூர்யா அவர்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது. என்னை விட என் மனைவிக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. என்றார்.