கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்து இளைஞர்களின் வரவேற்பைப் பெற்ற படம் '7 ஜி ரெயின்போ காலனி'. அப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கில் '7 ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன் மற்றும் பலர் நடிக்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதியன்று படத்தின் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்கள்.
படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்படுவதை கொஞ்சம் தள்ளி வைத்ததாகத் தகவல். இப்படத்தின் தயாரிப்பாளரான ஏஎம் ரத்னம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீர மல்லு' படத்தை முடித்து வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறார். இந்தப் படம் ஜுன் 12ல் வெளியாக உள்ளது. அதன் பிறகு '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்து குறுகிய காலத்தில் முடிக்க உள்ளார்களாம்.
விரைவில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என்றும், இந்த வருடத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இன்று சென்னையில் நடைபெற்ற 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தெரிவித்தார்.