குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்தப்படம் தெலுங்கில் ‛7ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியானது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படம் ஒரு சில காரணங்களால் கிடப்பில் கிடந்தது என சினிமா வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவு பெற்று இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாம். அதுவும் விரைவில் படமாகிவிட்டால் மொத்த படமும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.