குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தி படமான 'தேரே இஸ்க் மெயின்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கிர்த்தி சனோன் நாயகியாக நடிக்கிறார். இதற்கிடையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் உருவாகிறது. இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகிறது என்கிறார்கள்.