மீண்டும் இணைந்த களவாணி கூட்டணி | லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி : இயக்குனர் யார்? | குபேரா படத்தின் 8 நாள் வசூல் என்ன | இலியானாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது | 35 லட்சம் பேக் : கயாடு பதில் சொல்வாரா | விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? |
களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர்கள் இயக்குனர் சற்குணம் மற்றும் நடிகர் விமல். இந்த படத்திற்கு பிறகு ‛வாகை சூடவா, களவாணி 2' ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் வெளியானது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சற்குணம் இயக்கத்தில் விமல் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கலாட்டா பேமிலி' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக அனிகா விக்ரமன் நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், வேலராமமூர்த்தி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.