என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நான்கு, ஐந்து படங்களில் நடித்துவிட்டு விளம்பர அலப்பறை செய்கிறவர்களுக்கு மத்தியில் 400 திரைப்படங்களிலும் 600 மேடை நாடகங்களிலும் சத்தமே இல்லாமல் நடித்து சாதித்து மறைந்தவர் டைப்பிஸ்ட் கோபு. திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த இவர் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். நாகேஷ் உடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார்.
நாகேஷ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு அவரது சிபாரிசால் கே. பாலச்சந்தர் இயக்கிய 'நானல்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நாகேஷுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்த இவருக்கு நாகேஷ் தான் திருமணம் செய்து வைத்தார்.
கோபால ரத்தினம் என்பது இவரது இயற்பெயர்; கோபு என்று செல்லமாக அழைப்பார்கள். 'டைப்பிஸ்ட்' என்பது டி.எஸ். சேஷாத்ரியின் மேடை நாடகமான "நெஞ்சே நீ வாழ்க"யில் அவர் நடித்த பிரபலமான கேரக்டரின் பெயர். அதனை அவர் தனது புனைப் பெயராக வைத்துக் கொண்டார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகத்தை கைவிடாத இவர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடக குழுவில் தொடர்ந்து நடித்து வந்தார். உலகின் பல நகரங்களில் நடந்த நாடகத்தில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார்.
ஆனாலும் தனது இறுதி காலத்தை வறுமையில் கழித்தார். தனது வருமானத்தில் பெரும் பகுதியை நோயுற்ற தனது மகனின் மருத்துவ தேவைக்காகவே செலவிட்டார். 2019ம் ஆண்டு தனது 85வது வயதில் காலமானார். வாழும்போதும், மறைந்த பிறகும் சினிமா கண்டுகொள்ளாத கலைஞர்களில் டைப்பிஸ்ட் கோபுவும் ஒருவர் .