ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் ரசிகர்களை 30 ஆண்டுகளாக தனது மெல்லிசையால் தாலாட்டியவர் எம்.எஸ்.விஸ்வாதன், பிறப்பில் மலையாளியாக இருந்தாலும், இசையில் தமிழனாக வாழ்ந்தவர். இந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தவர், 50 படங்களுக்கு மேல் நடித்தவர்.
தமிழ்த்தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த' பாடலுக்கு இசை அமைத்து காலத்தை கடந்தும் ஒலிக்கச் செய்தவர். மழைக்குகூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் இணையற்ற இசைப்பள்ளியாகத் திகழ்ந்தார்.
இப்படிப்பட்ட மாமேதைக்கு அரசு விருதுகள் பெரிதாக வழங்கப்படவில்லை. தலா ஒரு முறை ஆந்திரா மற்றும் மலையாள அரசின் விருதுகளை பெற்றார். தமிழக அரசு கவுரவ விருதும், கலைமாமணி விருதும் மட்டுமே வழங்கியது. இவரது பாடல்கள் தேசிய விருது பெற்றாலும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை இவர் பெறவில்லை.
மெல்லிசை மன்னருக்கு விருதுகள் வந்து சேராதது குறித்து அவரது நண்பர்கள் கூறும்போது "எம்.எஸ்.வி விருதுகள் மீது நாட்டம் இல்லாதவர். தேடி விருது பெறும் அளவிற்கு திறமை இல்லாத கூச்ச சுபாவம் உள்ளவர். சில விருது பெற்றவர்கள் குறித்து அவரிடம் சொன்னார். விருது கொடுக்கிறவங்க அறிவாளிகள்தானே அவர் நல்லா இசை அமைச்சதனால அவருக்கு கொடுத்திருக்காங்க இதுல என்ன தப்புங்றேன்... என்று வெகுளியாக சொல்வார்" என்கிறார்கள்.
விருதுகளை கடந்து வாழ்ந்த இந்த இசை மேமையின் 10வது நினைவு நாள் இன்று.