லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் கோட்டா சீனிவாசராவ். அவரின் அப்பா டாக்டராக புகழ்பெற்றவர். தந்தையை போன்று டாக்டராக வேண்டும் என்றுதான் முதலில் அதற்காக படித்தார். ஆனால் பள்ளி, கல்லூரி நாடகங்களில் நடித்ததால் சினிமாவின் பக்கம் அவரது கவனம் திரும்பியது.
தனித்துவமான உடல் மொழி, நையாண்டித்தனமான தெலுங்கு உச்சரிப்பு, கடுமையான தோற்றம் இதுவே அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது. 1978ம் ஆண்டு 'பிராணம் கீரகிடு' என்ற படத்தின் மூலம் காமெடி கலந்த வில்லனாக அறிமுகமானார்.
அதன்பிறகு அங்கு பல படங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்று 2003ம் ஆண்டு 'சாமி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த பெருமாள் பிச்சை கேரக்டர் பிரபலமானது. அதன் பிறகு குத்து, ஜோர், ஏய், கோ, திருப்பாச்சி, பரமசிவன், கொக்கி, லாடம், பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆல் இன் ஆல் அழகுராஜா, மரகத நாணயம் படங்களில் அவரது கமெடி நடிப்பு பெரிதாக கவர்ந்தது.
700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாசராவ் சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை 9 முறை பெற்றுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கோட்டா சீனிவாசராவின் தமிழ் குரல் மிகவும் பிரபலம், அதை பேசியது டப்பிங் கலைஞர் ராஜேந்திரன். 30 படங்களுக்கு மேல் அவரே டப்பிங் பேசினார். கோட்டா சீனிவாசராவ் எந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும், தமிழில் ராஜேந்திரன் தான் டப்பிங் பேச வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விடுவார்.
அவரது மகனுக்கு அவர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொடுத்தார். அதை மகன் முதன் முதலாக ஆசையாக ஓட்டிச் செல்ல இவர் பின்னால் காரில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது கண்முன்னாலே மகன் பலியானார்.
இந்த சம்பவத்தில் இருந்து மனம் உடைந்த சீனிவாசராவ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மிகவும் நெருக்கமானவர்கள் கேட்டால் மட்டும் நடித்துக் கொடுத்தார். கடைசி வரை மகன் நினைவாகவே உயிரையும் இழந்தார்.