ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சத்யஜோதி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் தயாரித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், தீபா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசைமையத்துள்ளார். வருகிற 25ம் தேதி வெளிவருகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வு நேற்று நடந்தது. இதில் விஜய்சேதுபதி பேசியதாவது: எனக்கும் இயக்குனர் பாண்டிராஜுக்கும் மனஸ்தாபம் இருந்தது. அது ஒரு சின்ன பூ மாதிரி மலர்ந்து சரியானது. இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என்று ஆரம்பித்து இன்று படம் ரிலீஸ் வரை வந்திருக்கிறது.
நித்யா மேனனுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாள் இருந்தது. அவர் நடித்த ஒரு மலையாளப் படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்தேன். ஆனாலும் பெரிய அளவிற்கு சந்திப்பு இல்லை. உங்களுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அது இப்போது நடந்திருக்கிறது.
இந்த படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது. அதை நினைத்து பார்க்கவும் முடியாது. இந்த படம் மட்டுமல்ல அவர் நடித்துள்ள எந்த படத்திலும், எந்த கதாபாத்திரதத்திலும் இன்னொருவரை பொருத்தி பார்க்க முடியாது. சும்மா வந்தோம் நடித்தோம் என இல்லாமல், அந்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எல்லாத் தேவைகளையும் புரிந்து கொண்டு நடிக்கக் கூடிய கலைஞர் நித்யா.
500 கிலோ மீட்டர் பயணம் செய்தோமென்றால் ஒவ்வொரு கிலோ மீட்டரும் நினைவில் நிற்காது. ஆனால் சில இளைப்பாறல்கள், சில காட்சிகள், சில ஊர்கள் நினைவில் இருக்கும். அதை நினைத்துப்பார்த்தால் மீண்டும் அந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றும். அப்படித்தான் பாண்டிராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் இப்போது இருக்கிறது.
கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், டார்ச்சரா இருந்தாலும் ஷூட்டிங்கை ரசிச்சோம். என்னையும், நித்யா மெனெனையும் அடிச்சு டார்ச்சர் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆள் வச்ச மாதிரி இருந்தது. அது எல்லாமே படத்தின் மேன்மைக்காகத்தான். என்றார்.




