இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் படம் 'வேட்டுவம்'. ஆர்யா, 'அட்டகத்தி' தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிங்கேஷ், சாய் தீனா உள்பட பலர் நடிக்கிறார்கள். இதனை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் நடந்தது. தற்போது வேதாரண்யம் பகுதியில் நடந்து வருகிறது. வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி பகுதியில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் காரில் இருந்து தாவிப் பாயும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மோகன்ராஜை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 52. இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.