டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

என்டிஆருக்கு திருப்புமுனையை தந்த படம் 'பாதாள பைரவி' வெளியாகி தற்போது 74 ஆண்டுகளை கடந்து 75வது ஆண்டு தொடங்கி உள்ளது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வெளியான இந்தப் படம் 200 நாட்களை கடந்து ஓடியது. அதிக நாட்கள் ஓடி, அதிக வசூலை கொடுத்த முதல் தெலுங்கு படம் என்ற பெயரையும் பெற்றது.
இந்த படத்தில் என்.டி.ராமராவுடன் எஸ்.வி. ரங்கா ராவ், மாலதி, சி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு, ரேலங்கி வெங்கட்ராமையா, பாலகிருஷ்ணா, பத்மநாபம், வல்லம் நரசிம்ம ராவ், நாராயண ராவ், மகாங்காளி வெங்கையா, சுரபி கமலாபாய், ஹேமலத்தம்மா ராவ், டி.ஜி. கமலா தேவி, கிரிஜா உள்பட பலர் நடித்தார்கள். இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்ற 100 படங்களில் பாதாள பைரவியும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க முன்னதாக நாகேஸ்வர ராவ் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத நிலையில் அவரால் நடிக்க முடியாமல் போக, இந்த கேரக்டரில் புதுமுக நாயகனான என்டிஆர் நடித்திருந்தார்.
விஜயா புரொடக்ஷன் தயாரித்த இந்த படம் பிரபல தெலுங்கு எழுத்தாளர் மதிரா சுப்பண்ணா எழுதிய நாட்டுப்புற கதையை தழுவி உருவானது. கேவி ரெட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதன் முதலில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 1952ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற முதல் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. அதன்பிறகு 2023ம் ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நவீன தொழில்நுட்பத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பாதாள பைரவி திரையிடப்பட்டது.