பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? |
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்கள் கணவரை இயக்குனராக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். முதன் முறையாக தனது தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர். இவரின் தம்பிதான் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அக்காவுக்கு துணையாக தஞ்சாவூரில் இருந்து வந்த ராமண்ணா அவருக்கு மானேஜராக, உதவியாளராக எல்லா வகையிலும் துணையாக இருந்தார்.
தம்பி தனக்கு உதவியாளராக மட்டும் இருந்து விடக்கூடாது என்பதற்காக அவரை சிட்டி ஸ்டூடியோவில் உதவி கேமராமேனாக பணியில் சேர்த்து விட்டார். அவர் அப்படியே சினிமாவை கற்றுக் கொண்டு தனது இயக்குனர் கனவை அக்காவிடம் சொன்னார். அதை ஏற்ற ராஜகுமாரி, தம்பி மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தை கொண்டு 'ஆர்.ஆர் பிக்சர்ஸ்' என்ற பெயரில் தம்பியை இயக்குனராக்கி, அவரது முதல் படத்தை தானே தயாரித்து, நடிக்கவும் செய்தார். அந்த படம் 'வாழப்பிறந்தவள்'. ஹீரோயின் சப்ஜெக்டாக உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு ராமண்னா, 'கூண்டுக்கிளி, குலேபகாவலி, புதுமைப்பித்தன், காத்தவராயன், ஸ்ரீ வள்ளி, பாசம் , பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், அருணகிரிநாதர் , பணம் படைத்தவன், நீ, குமரிப் பெண், பறக்கும் பாவை, நான் , மூன்றெழுத்து, தங்கசுரங்கம், சொர்க்கம், வீட்டுக்கு ஒரு பிள்ளை, சக்தி லீலை, பாக்தாத் பேரழகி, என்னைப்போல் ஒருவன், இலங்கேஸ்வரன், குலேபகாவலி, புதுமைப்பித்தன், காத்தவராயன், ஸ்ரீ வள்ளி, பாசம் , பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், நீ, குமரிப் பெண், பறக்கும் பாவை, நான், மூன்றெழுத்து, தங்கசுரங்கம், சொர்க்கம், குப்பத்து ராஜா, கன்னித்தீவு, குலக்கொழுந்து, சட்டம் சிரிக்கிறது' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
அவரது இயக்கத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்தார்கள். 'மணப்பந்தல், துலாபாரம்' படங்களை தனியாகவும் தயாரித்தார். நடிகை ஈ.வி.சரோஜாவை திருமணம் செய்து கொண்ட இவர் 1974ம் ஆண்டு தனது 74வது வயதில் காலமானார்.