டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

அழகு மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.பி.தனசேகர், ராமு லட்சுமி தயாரிக்கும் படம் "பூங்கா". தயாரிப்பாளர் தனசேகரே படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக கவுசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். அசோக் ஒளிப்பதிவு செய்கிறார் , அகமது விக்கி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தனசேகர் கூறும்போது "பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம். ஒரு பூங்காவில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்த படம் தயாராகி வருகிறது. நாலு பசங்க பிரச்னைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்னை தீர்ந்ததா என்பதுதான் கதை. முழு படமும் ஒரு பூங்காவில் நடக்கிறது" என்றார்.